சனி, 21 அக்டோபர், 2017

876. வெள்ளம் அளித்த விடை: கவிதை

வெள்ளம் அளித்த விடை
பசுபதி


( கலைமகள் 2017 தீபாவளி மலரில் வெளியான கவிதை.)

அனுமானின் தோளேறி அரக்கருடன் பொருதுகையில்
அனுமானை அடித்ததனால் ஆர்த்தெழுந்தே இராவணனை
தனுவெடுத்து வீழ்த்தியது தாசரதி மனத்தெழுந்த
சினவெள்ளம்(1) அளித்த விடை.  (1)

கலிங்கத்தின் மேல்தொடுத்த கடும்போரில் வெற்றிகண்டும்
கலக்கமுற்ற அசோகமன்னன் கருணைவழி தழுவிநின்றான்;
புத்தமதம் பரந்தோங்கல் போர்க்களத்தில் அவன்பார்த்த
ரத்தவெள்ளம் அளித்த விடை.   (2)

பரசமயம் வேரூன்றிப் படராமல் தடுத்தபல
குரவர்கள் மறுமலர்ச்சி கொடுத்தனரே பாக்களினால் 
முத்தமிழை வளர்த்ததிரு முறைகள்நற் பாசுரங்கள்
பத்திவெள்ளம் அளித்த விடை.    (3)

இரக்கமின்றி செவியறுத்தல் இருந்தவொரு காலத்தில்
பொருள்சொல்ல இயலாமல் போட்டியிலே தோற்றவரின்
இருசெவிவெட் டாதசெயல் அருணகிரி மனம்சுரந்த
அருள்வெள்ளம்(2) அளித்த விடை. (4)

கவியுலகம் புலவர்தம் கடுந்தமிழின் வித்தைகளால்
தவிக்கையிலே தோன்றியநம் தவப்பயனாம் பாரதியின்
அமரத்வக் கவியருவி அவர்மனத்தில் ஊற்றெடுத்த
தமிழ்வெள்ளம் அளித்த விடை.   (5)

பெய்தமழை விரைவினிலே பேரிடராய் மாறிவிடக்
கைபிசைந்த அரசாங்கம் கதிகலங்கி நிற்கையிலே
தன்னலமில் மீனவர்கள் தன்னார்வ லர்தொண்டு
சென்னைவெள்ளம் அளித்த விடை. (6)

மார்கழிம கோற்சவத்தில் வாய்திறக்க முடியாமல்
மார்ச்சளி இருமலினால் மனமுடைந்த பாடகர்பின்
பக்குவமாய்ச் சமாளித்துப் பலேபெறுதல் அவர்குடித்த
சுக்குவெள்ளம் அளித்த விடை.   (7) 

(1) சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற “ –திருப்பாவை

(2) கருணைக்கு அருணகிரி” – பழமொழி


தொடர்புள்ள பதிவுகள்:


வெள்ளி, 20 அக்டோபர், 2017

875. தொ.மு.சி.ரகுநாதன் -1

சமர்ப்பணம்
தொ.மு.சி. ரகுநாதன்


அக்டோபர் 20. தொ.மு.சி.ரகுநாதனின் பிறந்த நாள்.

அவர் ‘சக்தி’யில் 1948-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ!தொடர்புள்ள பதிவுகள்:

தொ. மு. சி. ரகுநாதன்: விக்கிப்பீடியா

புதன், 18 அக்டோபர், 2017

874. கங்கை பொங்கணும்! : கவிதை

கங்கை பொங்கணும்!
பசுபதி


இது அம்மன் தரிசனம் 2008 தீபாவளி மலரில் வந்த கவிதை.


தீபாவ ளித்திரு நாளினிலே -- வளை
 சேர்ந்தகை கொட்டியே கும்மியடி!
கோபாலன் பேர்புகழ் பாடுங்கடி! -- இது
 கோகுல பாலனின் பண்டிகைடி!

நாட்டினர் சேர்ந்துகொண் டாடிடுவார் -- இது
 ஞான ஒளிக்கொரு பண்டிகைடி!
வீட்டில் விளக்குகள் ஏற்றிடுவோம் -- ஒளி
 மெய்ம்மையை நெஞ்சில் இருத்திடுவோம்!

ஆண்டவன் பூஜைதான் முக்யமடி! -- இன்று
 ஆடம் பரமின்றிக் கூடிடுவோம்!
யாண்டும் படர்ந்த வறுமையிருள் -- அதை
 யாவரும் சேர்ந்து விரட்டிடுவோம்!

பாவி நரகனை மாய்த்ததிலே -- சத்ய
 பாமையின் பங்கினைப் போற்றுங்கடி!
ஆவித் துணையாய் இருந்தவள்டி - அவள்
 ஆயர் மகனையே காத்தவள்டி !

பூமியில் தீமைகள் செய்திடுவோர் -- அந்தப்
 புல்லரைக் கண்டச்சம் ஏதுக்கடி?
பாமையைப் போல்தீரம் வேணுமடி! - கொடும்
 பாதகம் செய்வோரைப் பார்த்ததுமே!

காலை குளித்திடும் போதினிலே -- இன்று
 கங்கை வருவாளந் நீரினிலே!
ஞாலத்தில் வன்மை தணித்திடவே - அன்பு
 நம்முள்ளே கங்கையாய்ப் பொங்கணும்டி!

 ==========

தொடர்புள்ள பதிவுகள்:

873. தீபாவளி மலரிதழ்கள் - 2

’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலரிலிருந்து 

சில இதழ்கள் .... 

' சாவி’ நடத்திய  இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே .

அட்டைப்படம் 

ஒரு விளம்பரம்


முகப்புப் படம்


வாழ்த்து

ஒரு பாடல்

 

பட விளக்கங்கள்வரவேற்பு ..எதற்கு? 


பாரதி மணிமண்டப விழா


ஒரு கதை
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

செவ்வாய், 17 அக்டோபர், 2017

872. ஆஸ்கார் வைல்டு - 1

இரத்த ரோஜா
ஆஸ்கார் ஒயில்டுஅக்டோபர் 16. ஆஸ்கார் வைல்டின் பிறந்த நாள்.

‘அஜந்தா’ இதழில் 1953-இல் வெளியான ஒரு கதை இதோ.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஆஸ்கார் வைல்டு : விக்கிப்பீடியா

திங்கள், 16 அக்டோபர், 2017

871. மு.கதிரேசன் செட்டியார் - 2

பண்டிதமணி
‘மணிமலர்’


அக்டோபர் 16. கதிரேசன் செட்டியாரின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.கதிரேசன் செட்டியார்

வெள்ளி, 13 அக்டோபர், 2017

870. வன்முறை : கவிதை

வன்முறை
சுபதி 

’திண்ணை’ மின்னிதழில்  7, அக்டோபர்,  2001 -இல் வந்த கவிதை. 

வன்முறைச் சின்னம் ‘பின் லேடன் ‘ — இவனைக்
கொன்றிடில் வென்றியென்(று) ஆர்ப்பவன் மூடன்.
புகைநடுவில் தீயெரியும் உண்மை — வன்முறைப்
. . புதிரை அவிழ்த்தால் உலகுக்கு நன்மை !
பகைமரம் வெட்டல்மிக எண்மை — அதன்வேர்
. . பரவாமல் செய்வதே கற்றோரின் தன்மை!   (1)
வினையறுக்க முந்துமோர் ஆளு — அவனை
. . ‘வினையை விதைத்தது யாரெ ‘ன்று கேளு !
பனையுயரம் நில்பலாத் காரம் — அதனைப்
. . பாலூட்டிச் சீராட்டல் யாருப சாரம் ?       (2)
கண்ணாடி மாளிகை மக்கள் — பிறர்மேல்
. . கனவிலும் வீசலா மோபெருங் கற்கள் ?
தண்மையே நல்வாழ்வின் சாரம் — உரிய
. . தண்டனை செய்திட வந்திடும் நேரம் !     (3)
கத்தியை நம்பியே வாழ்வான் — முடிவில்
. . கத்தியே காலனாய் வந்துயிர் மாள்வான் !
புத்தியே தந்திடும் சித்தி — இந்த
. . யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும்நல் உத்தி ! (4)
மார்பினில் பாய்வது யாரு ? — மேற்கு
. . வளர்த்த கடாவாம் தாலிபான் பாரு !
தேர்ந்து விரோதியை வெல்லு ! — கூட
. . வேற்றினம் மேலுள் வெறுப்பையும் கொல்லு! (5)
அரசியல் வாதியுப தேசம் — கேட்டு
. . ஆத்திரப் பாதையில் போகுதே தேசம் !
பரஸ்பரம் மானிட நேசம் — இருப்பின்
. . பாரிலே வாழலாம் இன்பமாய் வாசம் ! (6)
வெறுப்பினால் வந்ததித் துக்கம் — நிறைய
. . வேண்டும் நமக்கே இனநல்லி ணக்கம் !
கறுவினால் மூண்டதீ யாண்டும் — அணையக்
. . கருணை மழைபெய்ய ஈசனருள் வேண்டும் ! (7)
*******
வென்றி=வெற்றி; எண்மை=இலேசு; கறு=ஆழ்ந்த பகைமை.
தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 11 அக்டோபர், 2017

869. சுப்பிரமணிய சிவா -3

சிறைவாசம்
சுப்பிரமணிய சிவம்

‘சக்தி’ இதழில் 1948-இல் வந்த ஒரு கட்டுரை.

தொடர்புள்ள பதிவுகள்: 

சுப்பிரமணிய சிவா

செவ்வாய், 10 அக்டோபர், 2017

868. கோபுலு - 6

கலையுலகம் -1

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கோபுலு

திங்கள், 9 அக்டோபர், 2017

867. ஜெயபிரகாஷ் நாராயண் -1

கர்ம வீரர் ஜயப்பிரகாஷ் 
‘ஜம்பு’

அக்டோபர் 8. ஜெயபிரகாஷ் நாராயணனின் நினைவு தினம்.

‘பாரிஜாதம்’ இதழில் 1948-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.


தொடர்புள்ள பதிவுகள்:
ஜெயபிரகாஷ் நாராயண்: விக்கிப்பீடியா